பாலிவுட் திரைத்துறையின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக் கான்.
ஷாருக்கான் கடந்த ஆண்டு நடித்த மூன்று படங்களும் தலா ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளன. தற்போது தனது மகள் சுஹானா கான் நடிக்கும் கிங் என்ற படத்தில் ஷாருக்கான் கவனம் செலுத்தி வருகிறார். அப்படத்தை ஷாருக்கான் நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை பயணம் குறித்து பேசியிருக்கிறார். ” என்னுடைய அப்பா, அம்மா இறந்தப் பிறகு என்னிடம் பணம் எதுவும் இல்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. நானும் என் அக்காவும் மட்டும்தான். கஷ்டப்பட்டு பொருளாதரம் படித்தேன்.
பிறகு மாஸ் கம்யூனிகேஷனும் படித்தேன். இதற்கும் நான் நடிகர் ஆனதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்காது. தொலைக்காட்சியில் ஒன்றில் பணிப்புரிந்தேன். சம்பளமாக 1500 ரூபாய் கொடுத்தார்கள். அன்றைய சூழலில் அது மிகப்பெரிய பணம்தான். சரி இதுதான் நம்முடைய வேலை என்று செய்யத் தொடங்கி விட்டேன். இந்த வேலை என்னை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இறந்த என் பெற்றோர் என்னை நினைத்து கவலைப்படக்கூடாது என்பதற்காகவே கடினமாக உழைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…