Basics of Share Market 35 : 'பங்குகளா… ஃபண்டுகளா?' – நீங்கள் முதலீடு செய்ய ஏற்றது எது?!

சந்தையில் நீங்களே முதலீடு செய்ய கீழே உள்ள செக்லிஸ்ட் உங்களுக்கு டிக் ஆகிறதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்ளுங்கள்.

சந்தை எப்படி இருக்கிறது, எதில் முதலீடு செய்யலாம், சந்தையின் முக்கிய போக்கு என்ன போன்ற சந்தை அறிவும் உங்களுக்கு இருக்கிறதா?

உங்களது தேவைக்கேற்ப எந்தப் பங்கில் முதலீடு செய்யலாம், அதன் லாபம் எப்படி இருக்கும், வருங்காலத்தில் அந்தப் பங்கின் மதிப்பு எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணிக்க முடிகிறதா?

தெரிந்திருக்கிறதா?!

நம் கணிப்புக்கு மாறாக நாம் வாங்கிய பங்கு இறங்கினால், அதை எப்படி சமாளிக்கலாம்…அதை எப்படி மாற்றி அமைக்கலாம் என்று தெரிகிறதா?

சந்தையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம் தான். இதனால் அதிக மகிழ்ச்சியோ, படபடப்போ அடையக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கிறதா?

சந்தையில் ரிஸ்குகளும் உண்டு… லாபம் பார்க்க காத்திருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்கிறதா?

மேலே கூறியிருக்கிற அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது… அதை சந்திக்க தயார் என்றால் நீங்கள் தாராளமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இல்லையென்றால், மியூச்சுவல் ஃபண்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பது நல்லது. காரணம், உங்களுடைய இந்த ரிஸ்குகளை எல்லாம் ஓரளவு மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர் நிர்வகித்து கொள்வார்… அதனால், ரிஸ்குகள் ஒப்பீட்டு அளவில் குறைவு.

கடைசி வரை, மியூச்சுவல் ஃபண்டில் மட்டும் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. மியூச்சுவல் ஃபண்ட் போட்டுக்கொண்டு இருக்கும் காலத்தில் சந்தையின் போக்கு, சந்தை பற்றி நன்கு தெரிந்துகொண்டு, பின்னர் பங்குச்சந்தையை களம் காணுங்கள்.

நாளை: ‘பங்குச்சந்தையில் பின்பற்ற வேண்டிய 10 கோல்டன் ரூல்ஸ்!’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.