கலைஞர்களை கவுர​விப்பது மகத்தான பணி: சன்மார் குழு​மத்​தின் தலைவர் புகழாரம்

சென்னை: கலைஞர்களை கவுர​விப்பது மகத்தான பணி என்று டிரினிடி 14-ம் ஆண்டு இசை நாட்டிய விழா​வின் தொடக்க நாள் நிகழ்ச்​சி​யில் சன்மார் குழு​மத்​தின் தலைவர் என்.கு​மார் தெரி​வித்​துள்ளார். மனிதநேயரும் பரோப​காரருமான எஸ்.எம். முத்​துலஷ்மி​யின் நினை​வைப் போற்றும் வகையில் 14-வது ஆண்டு ‘டிரினிடி ஆர்ட்ஸ் ஃபெஸ்​டிவல் ஆஃப் இந்தியா’ விழா நேற்று முன்​தினம் மயிலாப்​பூர் ரசிக ரஞ்சனி சபாவில் தொடங்​கப்​பட்​டது.

நவ. 25 வரை பல்வேறு இசை, நாட்டிய நிகழ்ச்​சிகள் நடைபெற உள்ளன. விழா​வின் தொடக்க நாள் நிகழ்ச்​சி​யில் பங்கேற்ற சன்மார் குழு​மத்​தின் தலைவர் என்.கு​மார், மூத்த கலைஞர்​களுக்கு வாழ்​நாள் சாதனை​யாளர் விருதை​யும் இளம் கலைஞர்​களுக்கு பல விருதுகளை​யும் வழங்​கிப் பாராட்​டி​னார்.

அப்போது அவர் பேசி​ய​தாவது: திறமையான இளம் கலைஞர்​களுக்கு வாய்ப்புகளை வழங்​கு​வதோடு அவர்​களின் திறமையை அங்கீகரிப்​பதும் முக்​கி​யம். டிரினிடி அமைப்பு, கலைஞர்களை வாழ்த்​திப் பாராட்டும் மகத்தான பணியை செய்து வருகிறது. இன்னும் பல திறமை
யான கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்​களைப் பாராட்டும் பணியை தொடர்ந்து டிரினிடி அமைப்பு செய்​ய​வேண்​டும் என்றார். ‘தி இந்து’ நாளிதழின் முன்​னாள் ஆசிரியரும், கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறு​வனத்​தின் இயக்​குநருமான என்.ர​வி, ​விருது பெற்ற கலைஞர்களை பாராட்​டிப் பேசினார்.

மூத்த கர்னாடக இசைக் கலைஞர் வயலின் வித்​வான் வி.வி. சுப்​ரமண்​யம், பரதநாட்​டியக் கலைஞர் டாக்டர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் வாழ்​நாள் சாதனை​யாளர்​களாக கவுரவிக்​கப்​பட்​டனர். பிரின்ஸ் ராம வர்மாவுக்கு இசைப் பேரரசர் விருது, விக்​னேஷ் ஈஸ்வர், டாக்டர் பிருந்தா மாணிக்​கவாசகம் ஆகியோ​ருக்கு முறையே இசை அரசர், இசை அரசி விருதுகள் வழங்​கப்​பட்டன.

மேலும், அநிருத் ஆத்ரேயா (லய ரத்னா), ஸ்பூர்த்தி ராவ் (இசை செம்​மல்), எம்.எஸ்​.பிரணவ், ரித்விக் (ரைஸிங் ஸ்டார்), ஷீலா உன்னிகிருஷ்ணன் (பரத கலா ரத்னா), கிருத்​திகா சுர்​ஜித், ஹரினி ஜீவிதா (நாட்டிய ரத்னா), ஸ்ரேயா மூர்த்தி, நேகா ஆப்தே, தீப்தா சேஷாத்ரி, லேகா பிரசாத், அஷ்மிதா ஜெயபிர​காஷ், ஷபின் பிரைட் ஆகியோ​ருக்கு நாட்டிய செம்மல் விருது வழங்​கப்​பட்டன. ரித்விகா பழனி ரைஸிங் ஸ்டார் விருது பெற்​றார்.

விருது பெற்​றவர்கள் சார்பாக பிரின்ஸ் ராம வர்மா, நர்த்தகி நடராஜ் ஏற்புரை வழங்​கினர். முன்ன​தாக, நிகழ்ச்​சிக்கு வந்​திருந்​தவர்களை டிரினிடி கலை ​விழா​வின் ஒருங்​கிணைப்​பாளர் ​முரளி ராகவன் வர​வேற்றார். நிறைவில் அமைப்​பின் தலை​வர் ஆர்​.​முத்து​கு​மார் நன்​றி​ கூறினார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.