முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்காவின் மிக்சிகன் ( Michigan) நகரைச் சேர்ந்த டெரெக் பிஃபாஃப் (Derek Pfaff) என்ற 30 வயது நபர், 10 வருடங்களுக்கு முன்னாள் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவருடைய முகம் சிதைந்துவிட்டது. அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் அவரால் திட உணவுகளை உண்ணவோ, மற்றவர்களிடம் பேசவோ முடியவில்லை. மூக்கு இல்லாத காரணத்தினால் கண்களில் கண்ணாடியைக் கூட அவரால் அணிய முடியவில்லை. டெரெக்குக்கு கடந்த 10 ஆண்டுகளில் 58 மறுசீரமைப்பு முக அறுவை சிகிச்சை செய்தும், அவரால் கண் சிமிட்ட, புன்னகைக்கக்கூட முடியவில்லை.
அவருக்கு தற்போது, நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட திசுக்களின் உதவியால் முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை 50 மணி நேரம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் அவரது மேல் கண் இமைகள், தாடை எலும்புகள், கன்னத்தின் எலும்புகள், பற்கள், மூக்கு, கழுத்து தோல் உட்பட அனைத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
டெரெக் பிஃபாஃப்ஸின் முகத்தை 85 சதவிகிதம் சரி செய்துவிட்டதாக மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெரெக் பிஃபாஃபால் கண் சிமிட்டவும், உணவை விழுங்கவும், புன்னகைக்கவும், மூக்கின் வழியாகச் சுவாசிக்கவும் முடிகிறது. இது மருத்துவத் துறையில் ஒரு ‘மைல் கல்லாக’ பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் சாதனைப் பெண்களைக் கொண்டாடும், 2024-க்கான `அவள் விருதுகள்’ விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விகடனின் புதிய முயற்சியான `Vikatan Play’ (விகடன் ப்ளே) சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பாரதி பாஸ்கர் இன்றைய நிகழ்ச்சியில் `விகடன் ப்ளே’-க்கான லோகோவை வெளியிட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாடிய விகடனின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன், `விகடன் ப்ளே’-வின் முதல் எக்ஸ்க்ளூசிவ் ஒரிஜினல் ஆடியோவாக `நீரதிகாரம்’ தொடரை வெளியிட்டார்.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கோடு சேர்த்து அணைக் கட்டுமானத்தில் பங்கெடுத்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் மக்களின் உழைப்பையும் வரலாற்றையும் விரிவாகப் பதிவு செய்தது, ஆனந்த விகடனில் 122 வாரங்கள் தொடராக வந்த `நீரதிகாரம்’ நாவல். நாவலாகவும், புத்தகமாகவும் விகடன் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற `நீரதிகாரம்’ இன்று முதல் ஆடியோ வடிவிலும் வெளியாகியிருக்கிறது.