டெல்லி: நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது 5 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே 4முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 5வது குற்றப்பத்திரிகையாக குறிப்பிட்ட 5 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குளறுடிகள் காணப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த […]