2024-ம் ஆண்டுக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India 2024) கோவாவில் நடந்து வருகிறது.
மத்திய அரசு சார்பில், நடத்தப்படும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் 28-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு கலா அகாடமியில் நடைபெற்ற ‘Mastering the Unseen’ என்ற தலைப்பில் ஒர் உரையாடல் நடத்தப்பட்டது. அதில் மணிரத்னம் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு உரையாற்றி இருகின்றனர்.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மனிஷா கொய்ராலா, ” எனக்கு படங்கள் பார்க்க ரொம்ப பிடிக்கும். திரைதுறை ஜாம்பவான்களின் செயல்களைக் கவனித்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வேன். மணி சார் ஒரு மிகச்சிறந்த நபர். எனக்கு அவரை தெரிந்த நாளில் இருந்து இருவரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
சற்று நேரத்திற்கு முன்பு நான் மிகவும் சோர்வுற்று இருந்தேன். ஆனால் என்னை தயார்படுத்திக்கொண்டு இந்த நிகழ்வில் மணி சாரின் உரையைக் கேட்டேன். அவருடன் இரண்டு படங்களில் பணிப்புரிந்திருப்பதால் அவரைப் பற்றி கொஞ்சம் தெரியும். எப்போதும் புதுமையாக இருக்கூடியவர். அவருடைய படைப்புகளில் தலைச்சிறந்தவர்.
சமீபத்தில் அவருடைய பொன்னியின் செல்வன் 2 பாகங்களையும் பார்த்து வியந்தேன். கமல் ஹாசனை வைத்து இயக்கும் அவருடைய அடுத்தப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…