‘அரியலூர்ல குடுத்தாங்க… விழுப்புரத்துல குடுப்பாங்களா..?’ – காரை எதிர்பார்க்கும் திமுக ஒன்றிய செயலாளர்கள்

தமிழக முதல்வர் மாவட்ட வாரியாக அரசின் திட்டங்கள் குறித்த செயல்பாடு தொடர்பாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னொரு திசையில் துணை முதல்வர் உதயநிதியும் மாவட்ட வாரியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் நவம்பர் 25-ம் தேதி கடலூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், 28-ம் தேதி விழுப்பு​ரத்தில் முதல்வர் ஸ்டாலினும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்​கின்​றனர்.

இதையடுத்து, இவ்விரண்டு மாவட்​டங்​களிலும் உள்ள திமுக ஒன்றிய செயலா​ளர்கள் ஏகப்பட்ட எதிர்​பார்ப்பு​களுடன் காத்திருக்​கிறார்கள். அதற்கு காரணம் இருக்​கிறது. அமைச்​சர்​களாக, எம்பி, எம்எல்​ஏ-க்களாக இருப்​பவர்கள் எதையாவது புரட்டி எப்படி​யாவது தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், அடிமட்​டத்தில் இருக்கும் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் தன் கையை ஊன்றி கர்ணம் பாய வேண்டிய நிலையில் தான் இருக்​கிறார்கள். இதில் ஒரு சிலர் விதிவிலக்காக இருப்பது தனிக்கதை. இந்த வருத்​தத்தைப் போக்கும் வகையில் அமைச்சர் சிவசங்கர் ஒரு முன்னெடுப்பைச் செய்திருக்​கிறார்.

கடந்த 11-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்ட ஆய்வுப் பணிக்காக வந்த போது கட்சி நிகழ்ச்​சிகளிலும் கலந்து கொண்டார். அப்போது அரியலூர் மாவட்ட திமுக ஒன்றிய செயலா​ளர்கள் 13 பேரின் கட்சிப் பணிகளை ஊக்கு​விக்கும் விதமாக அவர்களுக்கு ஜீப்களை பரிசளித்தார் ஸ்டாலின்.

இது கட்சித் தலைமையின் கிஃப்ட் எனச் சொல்லப்​பட்​டாலும் மாவட்டச் செயலாளரான அமைச்சர் சிவசங்கர், தேர்தல் சமயத்தில் ஒன்றிய செயலா​ளர்களை ‘தெம்பாக’ வைத்துக்​கொள்​வதற்காக செய்து கொடுத்த ‘சிறப்பு’ ஏற்பாடு இது என்கிறார்கள்.

இதுவரை எந்த மாவட்ட அமைச்​சரும் ஒன்றிய செயலா​ளர்​களுக்கு இப்படி தாராளம் காட்ட​வில்லை என்பதால் சிவசங்​கரின் ‘சேவை’ இப்போது மற்ற மாவட்​டங்​களுக்கும் ஃபீவர் கணக்காய் பரவி இருக்​கிறது. அதனால் முதல்வர் ஆய்வுக் கூட்டத்​துக்கு வந்தால் நமக்கும் நிச்சயம் ‘கவனிப்பு’ இருக்கும் என்ற எதிர்​பார்ப்பில் விஷயம் தெரிந்த ஒன்றி​யங்கள் வழிமேல் விழிவைத்து முதல்​வருக்காக காத்திருக்​கிறார்கள்.

28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்​கிறார் முதல்வர். இது பவர்ஃபுல் அமைச்சர் பொன்முடியின் கோட்டை. போதாதுக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்​பாளராக அவரது மைந்தன் கவுதமசி​காமணி தான் இருக்​கிறார். தெற்கு மாவட்​டத்தில் 20 ஒன்றிய செயலா​ளர்கள் இருக்​கிறார்கள்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தில் இருப்​பதால் ஒன்றிய செயலா​ளர்​களுக்கு எதுவும் பெயர வாய்ப்​பில்லை. அதேசயம் தெற்கு மாவட்​டத்தில் கவுதமசி​காமணி இருப்​பதால் ஒன்றிய செயலா​ளர்கள், ‘இப்ப இல்லைன்னா எப்ப…’ என்று உற்சாகத் துள்ளலில் இருக்​கிறார்கள்.

இது தொடர்பாக வெளிப்​படையாக யாரும் பேசவில்லை என்ற போதிலும், கோலியனூர், காணை, விக்கிர​வாண்டி ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், “நம்ம மாவட்டச் செயலாளர் செய்யுறதுக்கு என்ன…” என்று தங்களுக்குள் பேசி வருகிறார்கள்.

அரியலூர் மாவட்​டத்தைப் போல நம்ம மாவட்​டத்​திலும் ஒன்றிய செயலா​ளர்​களுக்கு வாகனம் வழங்கும் வளமான திட்டம் ஏதும் இருக்கா என கவுதமசி​காமணி​யிடம் கேட்டதற்கு, “அதற்​கெல்லாம் வாய்ப்​பில்​லீங்க. நம்ம மாவட்டம் மிகப் பெருசு. இங்க இருக்கிற ஒன்றியச் செயலா​ளர்கள் எதையும் எதிர்​​பார்​க்காம மிகச் சிறப்பாவே செயல்​படுறாங்க” என்​றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.