லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ரேபரெலி மாவட்டத்தில் உள்ள சாலையில் நேற்று மாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 11 பேர் பயணித்தனர்.
சுல்தான்பூர் கிராம அருகே சென்றபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :