வாட்ஸ் ஆப் கால்களை ரெக்கார்ட் செய்ய முடியுமா? இதோ ஈசியான வழி..

Easy Ways To Record Whats App Video Calls : வாட்ஸ் ஆப் செயலியை இப்போது உலகளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில், இந்த செயலியில்தான் பலருக்கு பொழுதே விடிகிறது. கடந்த மே மாத நிலவரப்படி, வாட்ஸ் ஆப்பிற்கு 535.8 மில்லியன் பயணாளர்கள் இருக்கின்றனராம். அது மட்டுமல்ல, உலகளவில் இந்தியாவில்தான் இந்த செயலிக்கு அதிக பயணாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மெட்டாவுடன் வாட்ஸ் ஆப் இணைந்த பிறகு நேரடியாக வாட்ஸ்-ஆப்பில் இருந்து இன்ஸ்டாகிராம் செல்லும் ஆப்ஷன், சேட்களை ஹைட் செய்வது என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

விடியோ கால் ரெக்கார்டிங்:

வாட்ஸ் ஆப்பை, பலர் மெசஜ் செய்வதற்காக உபயோகித்தாலும், ஒரு சிலர் அதில் இருக்கும் வீடியோ கால் ஆப்ஷனைத்தான் அதிகமாக உபயோகித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்றவர்களால் பெரும்பாலும் நார்மல் காலில் பேச முடியாது. அதற்கும் உதவுகிறது, வாட்ஸ்-ஆப் காலிங். 

வாட்ஸ் ஆப்பில் வரும் மெசஜ்கள், சாதாரணமாகவே மொபைலில் அல்லது கூகுள் ட்ரைவில் சேவ் ஆகி விடும். ஆனால், வீடியோ காலை ரெக்கார்ட் செய்வதற்கான ஆப்ஷன்கள் இன்னும் இதில் கொண்டுவரப்படவில்லை. ஆனால், மூன்றாம் தரப்பு செயலிகளை வைத்து வாட்ஸ் ஆப் கால்களை ரெக்கார்ட் செய்ய முடியும். 

என்னென்ன ஆப்கள்:

ஒரு சில போன்களில், சாதாரணமாகவே, ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆப்ஷன் இருக்கும். இதை வைத்து கால்களை ஆடியோவுட ரெக்கார்ட் செய்யலாம். இதை தவிர வெவ்வேறு செயலிகளும் ப்ளே ஸ்டோர் மற்றும் IOS-ல் இருக்கிறது. 

Cube ACR: இந்த செயலியை பயன்படுத்தி, வாட்ஸ் ஆப் மட்டுமல்ல, பிற தளங்களில் இருந்து வரும் அழைப்புகளையும் ரெக்கார்ட் செய்யலாம். 

ACR Call recorder : இந்த ஆப்பை, இந்தியாவில் பலர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இவை, ரெக்கார்ட் செய்ய எளிமையாகவும் வசதியாகவும் இருக்குமாம்.

எப்படி ஆன் செய்வது?

கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில், நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் கால் ரெக்கார்டிங் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். 

இதனை இன்ஸ்டால் செய்தவுடன் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும். 

பின்னர் ரெக்கர்ட் செய்யும் ஆப்ஷனை, வீடியோ காலிற்கு முன்பு ஆன் செய்தால் அதுவே தானாக ரெக்கார்ட் ஆகிவிடும். 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.