டிசம்பர் முதல் புதிய OTP விதிகள்… சைபர் மோசடிகளை தடுக்க TRAI நடவடிக்கை

டிஜிட்டல் யுகத்தில், நமது வேலைகள் பல மிகவும் எளிதாகி விட்டாலும், சைபர் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணத்தை ஆன்லைன் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பார்கிறோம். இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் TRAI முக்கிய நடவடிக்கையை மேற்கண்டுள்ளது.

இணையம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பல வகையான ஆபத்துகளும் அதிகரித்துள்ளன. ஸ்மார்ட்போன்கள் நமது கடினமான பணிகளை எளிதாக்கியது ஒரு பக்கம் இருந்தாலும், மோசடி செய்பவர்கள் மற்றும் சைபர் குற்றவாளிகளுக்கு ஏமாற்றுவதற்கான சிறந்த வழியையும் வழங்கியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) சமீப காலங்களில் மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சமீபத்தில், ஆன்லைன் மோசடியைத் தடுக்க டிரேசபிலிட்டியை செயல்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI அறிவுறுத்தியது. வணிகச் செய்திகள் மற்றும் OTP One-Time Passwords தொடர்பாக அதனை கண்காணிக்கும் வகையில், டிரேசிபிலிட்டி விதிகளை நடைமுறைப்படுத்த TRAI ஆகஸ்ட் மாதம் அறிவுறுத்தல்களை வழங்கியது. இதனை அமல்படுத்துவதற்கான தேதியை TRAI பலமுறை மாற்றியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு OTP மெசேஜ் டிரேசபிலிட்டியை செயல்படுத்த TRAI அக்டோபர் 31 வரை அவகாசம் இருந்தது. ஜியோ, ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றின் கோரிக்கையைத் தொடர்ந்து, நிறுவனம் அதன் காலக்கெடுவை நவம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இப்போது அதன் காலக்கெடு நவம்பரில் முடிவடைய உள்ளது. ​​இனி, டிசம்ப 1ம் தேதி முதல், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வணிகச் செய்திகள் மற்றும் OTP செய்திகளைக் கண்காணிக்க ட்ரேசபிலிட்டி விதியை அமல்படுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் BSNL ஆகியவை டிசம்பர் 1 முதல் டிரேசபிலிட்டி விதியை அமல்படுத்தினால், OTP செய்தி வருவதற்கு நேரம் ஆகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வங்கி அல்லது முன்பதிவு போன்ற பணிகளுக்கான, நீங்கள் OTT பெறுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். மோசடி நடவடிக்கையில் ஈடுபபடுபவர்கள் போலி OTP செய்திகள் மூலம் எலக்ட்ரானிக் சாதனங்களை அணுகிவதால், பல மோசடிக்கு ஆளாகின்றனர். இதனை தடுக்கும் வகையில், OTP மற்றும் இதை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் கண்டிப்பாக அமல்படுத்த TRAI முடிவு செய்துள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.