RoW Rule: 2025 ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விதி அமல்… தொலைத் தொடர்பு துறை உத்தரவு

தொலைத்தொடர்பு துறையின் முன்னேற்றத்திற்காகவும், வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் மத்திய அரசு அவ்வப்போது புதிய விதிகளை அமல் படுத்தி வருகிறது. இந்நிலையில், மீண்டும் சில புதிய விதிகள் தொலைத்தொடர்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களும் இந்த புதிய விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிக்கு ரைட் ஆஃப் வே (RoW) விதி என்று பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாநிலங்களும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

RoW விதிகள் குறித்த விளக்கம்

பொது மற்றும் தனியார் சொத்துக்களில் டவர்கள் அல்லது தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை அமைப்பதற்கான தரங்களை RoW விதிகள் நிர்ணயிக்கின்றன. இந்த விதியின் உதவியால் தான் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தால் கவனம் செலுத்த முடிகிறது. அனைத்து தொலைத்தொடர்பு வழங்குநர்கள் RoW விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இதன் கீழ், பொது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு பல மாற்றங்களைக் காணலாம். இது ஜியோ, ஏர்டெல், வோடா, பிஎஸ்என்எல் போன்ற அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனவரி 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது

தொலைத் தொடர்பு துறையின் புதிய விதி ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும். ஆப்டிகல் ஃபைபர் லைன்கள் மற்றும் டெலிகாம் டவர்களை பொது இடங்களில் நிறுவுவதை முறைப்படுத்துவதே இதன் நோக்கம். நெட்வொர்க் அமைப்பை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு நிலைகள் என அனைத்து வகையிலும் முழுவதும் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களை கடைபிடிப்பதை இந்த விதி வலியுறுத்துகிறது. பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொழில்நுட்ப வடிவமைப்புகள் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.mநிலத்தடி உள்கட்டமைப்பிற்கான விதிமுறைகள், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் நிறுவல் மற்றும் பராமரிப்பின் போது ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் விதிகளில் கூறப்பட்டுள்ளது. 

டிஜிட்டல் பதிவுகளை பராமரிக்கும் செயல்முறை

 ஜனவரி முதல் புதிய விதி அமல்படுத்தப்படும் புதிய RoW விதி மூலம் அனுமதி பெறுதல் மற்றும் டிஜிட்டல் பதிவுகளை பராமரிக்கும் செயல்முறையை எளிதாக்கும். டெலிகாம் ஆபரேட்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குநர்களும் பலனடைவார்கள். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான RoW கொள்கையை அமல்படுத்துமாறு தொலைத்தொடர்பு வழங்குநர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜியில் அதிக கவனம் செலுத்தப்படும்

RoW இன் புதிய விதிகளில் 5G நெட்வொர்க்குகளில் அதிக கவனம் செலுத்தப்படும். ஏனெனில், நாடு முழுவதும் 5G நெட்வொர்க்குகளை விரிவுபடுத்தபுதிய டவர்களை நிறுவுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.