IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! – ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம் யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது.

2025 ஆம் ஆண்டிற்கான இந்த தொடரை முன்னிட்டு வீரர்களுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஆர்சிபி அணி 30 லட்சம் அடிப்படை விலைக்கொண்ட ராஷிக் சலாம் என்ற இளம் வீரரை 6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறது. நேற்றைய ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் வரலாற்றில் இல்லாத வகையில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

ராஷிக் சலாம்

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியாலும், மற்றொரு அதிரடி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றனர்.

500 வீரர்களுக்கும் மேல் ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். அதில் ராஷிக் சலாமை ஏலத்தில் எடுக்க ஆர்.சி.பி, சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே கடும் மோதல் நிலவி இருக்கிறது. கடைசியாக ஆர்சிபி ராஷிக் சலாமை வாங்கி இருக்கிறது. போட்டி போட்டுகொண்டு வாங்கிய ராஷிக் சலாம் யார்? இவரின் பின்புலம் என்ன? என்பதைப் பார்ப்போம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த ராஷிக் சலாம். இளம் வேகப்பந்து வீச்சாளரான இவரின் கிரிக்கெட் வளர்ச்சியில், இர்பான் பதானுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த ராஷிக்கின் திறமையை முதலில் அடையாளம் கண்டது இர்பான் பதான் தான். ஜம்மு- காஷ்மீர் அணியின் ஆலோசகராக இருக்கும் இர்பான் ரஞ்சி கோப்பைத் தொடருக்கான ஜம்மு அணிக்கு ராஷிக் பெயரை டிக் செய்தார்.

ராஷிக் சலாம்

அதன் பின்னர், உள்ளூர் கிரிக்கெட்டில் தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார் இந்த இளம் வேகப்பந்து வீச்சாளர். 2018-19ல் விஜய் ஹசாரே டிராபியில் ஜம்மு & காஷ்மீர் அணிக்காக தனது லிஸ்ட் ஏ போட்டியில் சலாம் அறிமுகமானார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ராஷிக் விளையாடும்போது, மும்பை அணியினர் கண்ணில் இவர் தென்பட 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல்லில் மும்பை அணி இவரை வாங்கியது. பிறகு டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடி இருக்கிறார். காஷ்மீரில் இருந்து ஐபிஎல்-க்கு வந்த மூன்றாவது வீரர் ஆவார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.