மட்டக்களப்பு களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பில் களப்பு நீர் எரிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது.

அனர்த்த காலங்களில் களப்பின் நீர் மட்டம் அதிகரித்தல், விளைநிலங்கள் தாழ்தல், கண்டல் தாவரங்களை நட்டு உயிர் பல்வகைமையை பாதுகாத்தல், மற்றும் வெள்ளப் பெருக்கின் பாதிப்பை குறைப்பதற்கும் களப்பில் சேர்கின்ற மண்ணை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம், மற்றும் களப்பு நிலங்களை சட்டவிரோதமாக மூடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்,
மேலும் பாதிப்பிற்குள்ளாகும் விவசாய விளை நிலங்களை அளவீடு செய்தல் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் நிபுணர்களுடன் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையார் ஜகன்நாத், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மற்றும் துறைசார் நிபுணர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.