தேசிய தெங்கு உற்பத்தியாளர்களின் 60வது அமர்வு மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பு 21 நாடுகளின் பங்குபற்றலுடன் கொழும்பில் ஆரம்பமானது.
இம் மாநாடு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் பி. கே. பிரபாத் சந்திரகீர்த்தி உட்பட 21 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இலங்கை, பீஜி, இந்தியா, இந்தோனேஷியா, ஜமேக்கா, கென்யா, மலேசியா, பப்புவா நியூ கினியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், தாய்லாந்து, வியட்நாம், கோட் டி ஐவரி, மைக்ரோனேஷியா, குயானா, கிரிபதி(இ), மார்ஷல் தீவுகள், செமோவா, திமோர் லெஸ்ட், டொன்கா, வெனுஆடு ஆகிய நாடுகள் இதில் உள்ளடங்கும்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கிய காரணிகளில் ஒன்றாக தென்னைப் பயிர்ச்செய்கை காணப்படுவதுடன், அது கலாச்சார ரீதியில் மிக முக்கிய துறையாகவும் திகழ்கின்றது.
அத்துடன், தேங்காய் உற்பத்தியின்; பொருளாதார பங்களிப்பை அதிகரிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இங்கு, இலங்கையின் சிறந்த தேங்காய் உற்பத்தியாளர் என்ற பட்டத்தை ஷகிலா விஜேவர்தன பெற்றார்.
மேலும், தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சனாதனி ரணசிங்க இலங்கையில் தென்னை உற்பத்தி தொடர்பாக செயற்பட்ட சிறந்த அரச அதிகாரிக்கான விருதையும் வென்றார்.
இந்த அமர்வு நவம்பர் 28ஆம் திகதிதி வரை நடைபெற உள்ளது.