Ajithkumar Exclusive: அஜித்துடன் மீண்டும் இணையும் இசையமைப்பாளர்; GBU-விலிருந்து வெளியேறினாரா DSP?

`குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. மொத்த படப்பிடிப்பும் இன்னும் 7 நாள்களில் முடிந்துவிடும் என மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் நவீன் `புஷ்பா 2′ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைப்பதாக முன்பே அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது அவருக்குப் பதில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் படத்திற்குள் வந்திருக்கிறாராம். சென்னையில் நடைபெற்ற `புஷ்பா 2′ திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில்கூட மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் செயல்களின் மீது அதிருப்தி தெரிவித்து சில விஷயங்களைப் பேசியிருந்தார் தேவி ஶ்ரீ பிரசாத். `புஷ்பா 2′ திரைப்படத்தின் பின்னணி இசைப் பணிகளையும் மற்றொரு இசையமைப்பாளர் பார்த்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.

GV Prakash

இந்நிலையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தேவி ஶ்ரீ பிரசாத்துக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் ரீப்ளேஸ் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தின் கதாநாயகனாக ஜி.வி. பிரகாஷ் நடித்திருந்தார். இதுமட்டுமல்ல, ஆதிக் ரவிசந்திரனுக்குப் பெரியளவிலான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்த `மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கும் அதிரடியான இசையை அமைத்துக் கொடுத்திருந்தார்.

தனது ஆதர்ச நாயகனை வைத்து தற்போது திரைப்படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் ஆதிக். தன்னுடைய கரியரின் மிக முக்கியமான திரைப்படத்திற்கு இசையமைக்கக் களமிறங்கியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இதற்கு முன்பு அஜித்தின் `க்ரீடம்’ திரைப்படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். தற்போது 17 வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜி.வி. பிரகாஷுக்கு ஏற்கெனவே இந்தாண்டு கேப்டன் மில்லர், தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர், மட்கா எனப் பல ஹிட் ஆல்பம்கள் அமைந்திருக்கின்றன. `குட் பேட் அக்லி’ ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பதால் `மார்க் ஆண்டனி’ திரைப்படத்தைப் போலவே அதிரடியான இசையைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.