சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்பதை தடைசெய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாள், திமுக வளர்ச்சி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48 வது பிறந்த நாளை, வர்த்தக அணியின் சார்பில் டிச.26ம் தேதி வரை ஒரு மாதம் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் உள்ளிட்ட நலத்திட்ட தனி உணவகங்கள் மீதான வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்துகிறோம்.
தமிழக வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது என்றும், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத கடைகின் முன் தலைமைக்கழக அனுமதியுடன் வர்த்தகர் அணி சார்பில் ஆர்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தொழில், வணிக உரிமக் கட்டணத்தை வணிகர்களின் இன்றைய நிலை கருதி சற்று குறைக்க வலியுறுத்துகிறோம். வாடகைக்கு கடை எடுத்து நடத்தும் சிறிய, நடுத்தர வணிகர்கள் தாங்கள் கடை மூலம் உரிமையாளர்களுக்கு செலுத்தும் வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ள மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற தமிழக முதல்வர் அழுத்தம் தர வேண்டும்.
பான்மசாலா- குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு உற்பத்திநிலையிலேயே மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் சில்லறை வணிகப்பொருட்களை விற்க மத்திய அரசு அனுமதியளிக்கக்கூடாது.
இதற்காக சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் விளை பொருட்கள் மீதான செஸ்வரியை ரத்து செய்து அரசாணை வெளியிடச்செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறது. இவ்வாறாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு வந்தவர்களை கோவை மாவட்ட மாநகர் அமைப்பாளர் மாரிச்செல்வன் வரவேற்றார். மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் விஜயராஜ் நன்றி தெரிவித்தார்.