நேற்றிரவு முதல் மகாவலி ஆற்றை அண்மித்த சில பகுதிகளில் பெய்து வரும் கடும்மழை காரணமாக திம்புலாகலை, எச்சலம்டபட்டை, ஹிகுராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில், தமன்கடுவ, தம்பலக்காமம்; மற்றும்; வெலிகந்த செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரம் வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மகாவலி ஆற்றை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையங்களினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.