நேற்று இரவு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில பிரதேங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக அப்பிரதேசங்களின் ஊடாக வழிந்தோடும் பல ஆறுகளின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஷ்வர தெரிவித்தார்.
தற்போது காணப்படும் அவசர வெள்ள நிலை தொடர்பாக இன்று காலை (26) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆறுகளின் பல பிரதேசங்கள் தற்போது வெள்ளப் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும், எதிர்காலத்தில் இப்பாதிப்பு அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் இன்று (26) நண்பகல் அளவில் மழை காணப்பட்டால் நிலைமை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டடிக்காட்டினார்.
இந்நிலை தொடர்பாக மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பதுடன், பிரதேச மற்றும் நீர் வழிந்தோடும் பகுதிகளான மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு ஊடாக செல்லும் ஆறுகளி;ன் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலமையின் செல்வாக்கு மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் அம்பாறை மாவட்டத்தில் லாஹ{கல பிரதேசத்தில் ஹெடஒய வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
இப்பகுதிளில் பயணம் செய்யும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். ஜி. சி. சுகிஷ்வர வலியுறுத்தினார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான் மற்றும் செங்கலடி பிரதேசங்களின் வீதிகள், பாலங்கள் போன்றவை நீரில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கு வெள்ள நீர் அதிகரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்களின் இடம்பெயர்வு, விசேட போக்குவரத்து நிலமைகள் தொடர்பாக தற்போது கணக்கெடுப்பு இடம்பெறுவதனால் இன்று நண்பகலின் பின்னரே அது குறித்த புள்ளி விபர அறிக்கைகள் கிடைக்கப் பெறும் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.