அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் அதிக மழை காரணமாக முந்தாணை ஆறு வழிந்தோடும் அம்பாறை மாவட்டத்தின் மஹா ஓயா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேராவூர் பெற்று மற்றும் கோரலை பற்றி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள முந்தாணை ஆற்றை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் வரையான காலப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
அதனால் அப்பிரதசத்தில் வாழும் மக்கள் அது தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறும் மேலும், வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ பிரிவு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், முந்தாணை ஆற்றின் வழிந்தோடும் பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையினை நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளதுடன் அதன் அருகில் உள்ள பிரதேசங்களில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 2024.11.28 வரை பிற்பகல் 02.30 வரை வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீர்ப்பாசனத் திணைக்களம் தமது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.