நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய பகுதிகள் முன்னரே இனங்காணப்பட்டதால், அப்பகுதிகளில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களுக்கு மேலதிக வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, பரீட்சார்த்திகள் எவ்வித பிரச்சினையும் இன்றி பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்பதால், அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பரீட்சார்த்திகளையும் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.