இளைஞர் கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை: கும்பகோணம் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கும்பகோணம்: பாபநாசம் அருகே முன்​விரோத தகராறில் இளைஞர் வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சகோதரர்கள் 2 பேர் உட்பட 10 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கும்​பகோணம் நீதி​மன்றம் நேற்று தீர்ப்​பளித்​தது. மேலும், 3 பேர் விடுதலை செய்​யப்​பட்​டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மேல கபிஸ்தலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண்​ராஜ் (22). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் செல்​வ​மணி​யின் இருசக்கர வாகனத்தை, மருத்​துவக்​குடி பாரதி​யார் நகரைச் சேர்ந்த சிலம்​பரசன் ​(35) என்பவர் வாங்​கிச் சென்​றுள்​ளார். அதை அவர் மீண்​டும் திருப்​பித் தராத​தால், இருசக்கர வாகனத்தை வாங்​கித் தரும்​படி, அருண்​ராஜிடம் செல்​வமணி கூறி​யுள்​ளார். அதன்​படி, செல்​வ​மணி​யின் இருசக்கர வாகனத்தை திருப்​பிக் கொடுத்து​விடும்படி சிலம்​பரசனிடம் அருண்​ராஜ் கண்டித்​துள்ளார். இதனால், இருதரப்​பினருக்​கும் முன்​விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், 2020 ஆக.12-ல் சிலம்​பரசன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திரு​வலஞ்​சுழி ஆர்ச் அருகில் நின்று கொண்​டிருந்த அருண்​ராஜை ஓட ஓட விரட்டி வெட்​டிக் கொன்றனர். இதுகுறித்து விசாரித்த சுவாமி மலை போலீ​ஸார் சிலம்​பரசன், அவரது சகோதரர் கவியரசன்​(32) மற்றும் நண்பர்​களான மருத்​துவக்​குடி பாரதி​யார் நகரைச் சேர்ந்த நவாஸ் குமார்​ (26). பாதிரிமேடு கீழத் தெரு​வைச் சேர்ந்த ராம் கணேஷ் (27), திரு​வைக்​காவூர் அண்ணா நகரைச் சேர்ந்த ஜீவா(44), மருத்​துவக்​குடியைச் சேர்ந்த யோகராஜ் (30), பொன்​பேத்​தி​யைச் சேர்ந்த ரஞ்சித்​ (27), கடிச்​சம்​பாடியைச் சேர்ந்த சிவா (22), நீடா​மங்​கலத்​தைச் சேர்ந்த ரிச்​சர்ட் சாமுவேல்​ (27), எருமைப்​பட்​டியைச் சேர்ந்த நெப்​போலியன்​ (26), கொந்​தகை​யைச் சேர்ந்த மணியரசன் (என்​கிற) முகமது ஆசிக்​ (26), ஓலைப்பாடியைச் சேர்ந்த பாரதிராஜன்​ (27), பேராவூரணி​யைச் சேர்ந்த கஜேந்​திரன்​ (34) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு கும்​பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசா​ரித்த நீதிபதி, குற்​றம்​சாட்​டப்​பட்ட 13 பேரில் சிலம்​பரசன், கவியரசன், நவாஸ் குமார், ராம் கணேஷ், ஜீவா, யோகராஜ், ரஞ்சித், சிவா, ரிச்​சர்ட் சாமுவேல், மணியரசன் ஆகிய 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். நெப்​போலியன், கஜேந்​திரன், பாரதிராஜன் ஆகிய 3 பேரை ​விடுதலை செய்து உத்​தர​விட்​டார். இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் வழக்​கறிஞர் பா.​விஜயகு​மார் ஆஜரானார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.