Siddharth – Aditi : இரண்டாவது முறையாக ராஜஸ்தானில் நடைபெற்ற சித்தார்த் – அதிதி திருமணம்!

சித்தார்த் நடிப்பில் உருவாகியிருக்கிற `மிஸ் யூ’ திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானவிலுள்ள பழமையான கோவில் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றது.

கடந்த 2021-ம் ஆண்டு சித்தார்த்தும் அதிதி ராவும் இணைந்து நடித்திருந்த `மகா சமுத்திரம்’ திரைப்படம் வெளியான பிறகுதான் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் பரவின. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து பல இடங்களுக்கு ஒன்றாக வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமாக தங்களில் சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இன்று ராஜஸ்தானில் இவர்களுக்கு இரண்டாவது முறையாக திருமணம் நடைபெற்றிருக்கிறது. ராஜஸ்தான் பிஷன்கார்க்கிலுள்ள அலியா கோட்டையில் இவர்களுக்கு இந்து முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இரண்டாவது முறையாக தற்போது நடைபெற்றிருக்கும் திருமணம் குறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ், “ The best thing to hold on to in life is each other!” என சேர்ந்து பதிவிட்டிருக்கிறார்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.