மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி குறித்து பாஜக மேலிடம்தான் இறுதி முடிவு எடுக்கும் என்று சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்காக, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் அன்புக்குரிய சகோதரிகள், சகோதரர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் நன்றி. சிவ சேனாவின் சாதாரண தொண்டனும் முதல்வராக வேண்டும் என்பது பால் தாக்கரேவின் கனவு. அந்த வகையில் 2.5 வருடங்கள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று தொலைபேசியில் பேசினேன்.
அப்போது, மகாராஷ்டிரா மக்களின் நலனுக்காக நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என என்னிடம் கூறினார். அப்போது நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதை நிச்சயம் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவி தொடர்பாக பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் இறுதி முடிவு எடுக்கும்.
மகாராஷ்டிரா முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு நான் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன். பாஜக-வின் முடிவுக்கு சிவசேனா முழுமையான ஆதரவைத் தரும்” என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs