Dhanush – Aishwarya: விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது சென்னை குடும்ப நல நீதிமன்றம்!

ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும் கஸ்தூரி ராஜாவின் மகன் நடிகர் தனுஷுக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் ஐஸ்வர்யாவுடனான திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்திருந்தார்.

அதன்பிறகுப் பிரிவு குறித்து தனுஷ் பேசும்போது, “நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையைத் தொடர உள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாகப் புரிந்து கொள்ளும் நேரம் இது! எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்து தனுஷ் இந்த பதிவைப் போட்டிருந்தார்.

Dhanush – Aishwarya

இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ள சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடி மனுத் தாக்கல் செய்தனர். இவர்கள் அளித்த மனு குடும்ப நல நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி இருவரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சொல்லி போட்ட உத்தரவின் பேரில் இருவரும் நேரில் ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார் நீதிபதி சுபாதேவி.

அப்போது விவாகரத்து முடிவில் இருவரும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இன்று இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.