ஸ்கிரீன் கார்டு: புதிய ஸ்மார்ட்ஃபோனை வாங்கிய உடனேயே, நாம் செய்யும் முதல் வேலை, அவர் அதைப் பாதுகாக்க டெம்பர்ட் கிளாஸ் அல்லது ஸ்கிரீன் கார்டை போடுவது தான். ஆனால், வாங்கும் போது, சில விஷயங்களை கவனிக்க வேண்டும். ஸ்கிரீன் கார்டை போடுவதில், ஒரு சிறிய கவனக்குறைவு கூட உங்கள் ஸ்மார்ட்போனின் திரை மற்றும் அனுபவத்தை பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஸ்மார்ட்போனின் திரை அதன் மிக முக்கியமான பகுதியாக இருக்கும் நிலையில், ஸ்கீரின் கார்ட் இல்லாமல் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவது ஸ்கீரினிற்கு சேதம் விளைவிக்கலாம். கீறல்கள், தூசி மற்றும் பிற வெளிப்புற சேதங்களிலிருந்து ஸ்மார்ட்போன் திரைகளைப் பாதுகாக்க ஸ்க்ரீன் கார்டுகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஸ்கிரீன் கார்டை வாங்குவதிலும், அதனை போனில் பொடுவதிலும் ஏற்படும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட உங்கள் ஸ்மார்ட்போனின் திரை மற்றும் அனுபவத்தை பாதிக்கும் (Tech Tips) என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கதிர்வீச்சு மற்றும் வெப்பம் அதிகரிக்கும்
ஸ்க்ரீன் கார்டு தரமானதாக இல்லை என்றால், அதனால், கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மோசமான தரம் கொண்ட ஸ்க்ரீன் கார்ட் கொண்ட போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது, போன் அதிகமாக வெப்பமடையலாம். தரமற்ற ஸ்கீரின் கார்டு கதிர்வீச்சு மற்றும் பிற மின்காந்த விளைவுகளையும் அதிகரிக்க கூடும்.
ஸ்க்ரீன் கார்டில் குமிழ்கள் மற்றும் தூசி குவிதல்
ஸ்கிரீன் கார்டை நிறுவும் போது, காற்று குமிழ்கள் அல்லது தூசி துகள்கள் ஸ்க்ரீன் கார்டுக்கு அடியில் சிக்கிக்கொள்ளலாம். இதைக் கவனிப்பது அவசியம். திரையில் உள்ள குமிழ்கள் அதன் காட்சி மற்றும் தொடும் அனுபவத்தை கெடுத்துவிடும். காலப்போக்கில், இந்த குமிழ்கள் தொலைபேசியின் ஒரிஜினல் திரையை சேதப்படுத்தும். திரையில் தூசி மற்றும் அழுக்கு குவிந்து கீறல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
ஓலியோபோபிக் பூச்சுக்கு சேதம்டையலாம்
பெரும்பாலான ஸ்மார்ட்போன் திரைகளில் ஓலியோபோபிக் பூச்சு உள்ளது. இது கைரேகைகள் மற்றும் எண்ணெய் கறைகளால், திரைக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஸ்கிரீன் கார்டைத் திரும்பத் திரும்பப் மாற்றுதல் மற்றும் அகற்றுவது இந்த பூச்சுக்கு சேதம் விளைவிக்கும். இந்த பூச்சு அகற்றப்பட்டால், நாம் திரயை தொடும் போது, அதில் கைரேகைகள் அதிகமாகத் தெரிவதைக் காணலாம்.
டச் ரெஸ்பான்ஸ் திறன் குறைதல்
ஸ்கிரீன் கார்டின் தடிமன் மற்றும் தரம் ஸ்மார்ட்போனின் டச் ரெஸ்பான்ஸ் திறனை, அதாவது, தொடுதிரையின் உணர்திறனை பாதிக்கலாம். இதன் காரணமாக திரையில் டச் கட்டளைகள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். கேமிங் அல்லது வேகமாக தட்டச்சு செய்வது போன்ற பணிகளில் சிக்கல்கள் இருக்கலாம். மெல்லிய அதே சமயம், தரமான திரைக் காவலர் தொடு அனுபவத்தை மோசமாக்குகிறது.
திரையின் ஒரிஜினல் தரத்தை இழக்கும் அபாயம்
ஸ்கிரீன் கார்டை நிறுவுவதால், திரையின் பிரகாசம் குறைந்து, டிஸ்ப்ளே மந்தமாகத் தோன்றும் வாய்ப்பு உள்ளது.அதாவது, ஸ்மார்ட்போன் திரையின் உண்மையான பிரகாசத்தையும் நிறத்தையும் குறைத்து உஙக்ள் திரை அனுபவத்தை பாதிக்கலாம். குறிப்பாக மலிவான விலை கொண்ட ஸ்க்ரீன் கார்டுகள் காட்சி தரத்தை அதிகம் பாதிக்கிறது.
மேலும் படிக்க | ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்… 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்