`நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
இந்த ஆவணப்படத்தில் `நானும் ரெளடி தான்’ திரைப்படத்தின் BTS காட்சிகளுக்கு என்.ஓ.சி கேட்டதற்கு இரண்டு ஆண்டுகளாக தனுஷ் அதை கொடுக்காமல் இருந்தாகவும் அதன் பிறகு அந்தக் காட்சிகள் அந்த ஆவணப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூன்று பக்கத்திற்கு காட்டமாகக் கடிதம் எழுதி வெளியிட்டிருந்தார் நயன்தாரா.
சினிமா பிரபலங்கள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவாக அந்தப் பதிவிற்கு லைக் இட்டிருந்தது பேசு பொருளானது. அந்த பதிவை நடிகை பார்வதி திருவோத்துவும் பகிர்ந்திருந்தார். நயன்தாராவுக்கு அப்போது உறுதுணையாக இருந்து அந்தப் பதிவை பகிர்ந்தது பற்றி தற்போது பேசியிருக்கிறார் பார்வதி. இது குறித்து அவர், “ நான் நயன்தாராவின் பதிவைப் பார்த்தவுடனே அதனைப் பகிர வேண்டுமென நினைத்தேன். தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் என இன்று அறியப்படுபவர் மூன்று பக்கம் கடித்தத்தை எழுதும் அவசியத்தை நினைத்துதான் நான் பகிர்ந்தேன். காரணமில்லாமல் நேர்காணல்கள் அவர் கொடுக்கமாட்டார் என்பது நமக்குத் தெரியும்.
அவர் அனுபவித்த வருத்தங்களைக் குறிப்பிட்டு மூன்று பக்கக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் உண்மையான பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறார். உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் அந்த விஷயத்தில் ஒரு மதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு சமயத்தில் மற்றவர்களில் நம்மை உணர்வோம். அதனால்தான் அவர் செய்தது சரியானது எனப் பகிர்ந்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…