சென்னை: அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் வாரத்தின் முதல்நாளில் ஆட்சியரிடமும், அவ்வப்போது துறை அதிகாரிகளிடமும் மனு கொடுக்கின்றனர். ஆனால், இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்களால் வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும் என்றும், அவை நிராகரிக்கப்படுவதற்கான […]