Google Storage முழுசா முடிஞ்சிருச்சா? கவலைய விடுங்க..இந்த ட்ரிக்கை யூஸ் பண்ணுங்க!

What To Do If Your Google Storage Got Full : சில ஆண்டுகளுக்கு முன் வந்த கூகுள் ஸ்டோரேஜ் அப்டேட் பலரையும் நிலைகுலைய செய்தது. காரணம், நம் மொபைல் போனில் ஒருவரின் நம்பரை சேமித்து வைப்பதிலிருந்து, போட்டோக்களை பாதுகாப்பாக வைப்பது வரை அனைத்திற்கும் உதவியது கூகுள் ஸ்டோரேஜ் தான். இதில் நமக்கே தெரியாமல் கூட நமது போனில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்லோட் ஆகியிருக்கும். இந்த நிலையில், 15 gb-க்கு அதிகமாக போட்டோக்கள் அல்லது பைல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தனியாக google ஸ்டோரேஜை பணம் கொடுத்து அப்கிரேட் செய்ய வேண்டும் என்ற ஆப்ஷன் வந்தது. இப்படி google ஸ்டோரேஜ் அதிகமாகும் சமயத்தில் நமக்கு வரவேண்டிய முக்கியமான  மெயில்கள் கூட வந்து சேராது. இப்படி தாறுமாறாக ஃபுல்லாக இருக்கும் கூகுள் ஸ்டோரேஜ் எப்படி கிளியர் செய்வது? இங்கு பார்ப்போம். 

Google One Storage-ல் சரிபார்ப்பது:

Google One Storage-ற்கு சென்று, உங்கள் Gmail, Google Drive, மற்றும் Google Photos எது அதிக இடத்தை ஸ்டோரேஜில் வைத்திருக்கிறது என்பதை பாருங்கள். இதில் அதிக இடம் எடுத்து வைத்துள்ளவை எவை என்பதை கண்டறிந்து, அவை தேவையற்றதாக இருந்தால் Delete செய்து கொள்ளலாம்.

பெரிய இணைப்புகளை நீக்குதல்:

Gmail-இல் “has:attachment larger:10M” என்பதை போட்டு Search கொடுக்கவும். இது, மெயிலில் வந்திருக்கும் பெரிய ஃபைல்கள் உள்ள மெயில்களை கண்டறியும். பின்னர் அதனை Trash செய்யவும். 

Google Photos-ஐ சுத்தம் செய்யவும்:

நாம் எடுத்திருக்கும் சில போட்டோக்கள், ப்ளர் ஆனவையாக இருக்கும். போனில், மெயில் லாக்-இன் செய்து வைத்திருந்தால், அவை Google Photos-ல் அப்லோட் ஆகி விடும். அப்படிப்பட்ட போட்டோக்களை Google Photosல் கண்டிந்து, டெலிட் செய்யலாம். மேலும், அதிலிருக்கும் Manage Storage ஆப்ஷனுக்கு சென்று தேவையற்ற ப்ளர் போட்டோக்கள், ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது பெரிய சைஸ் வீடியோக்களை நீக்கவும்.

Google Drive-இல் பெரிய ஃபைல்களை நீக்கலாம்:

Google Drive-இல் Storage ஆப்ஷனுக்கு சென்று, பெரிய ஃபைல்களை வரிசைப்படுத்தவும். தேவையற்றவைகளை அழித்து Trash ஃபோல்டரில் இருக்கும் ஃபைல்களை காலி செய்யவும்.

Docs, Sheets, Slides:

Google Drive-இல் பழைய மற்றும் பயன்படுத்தாத Google Docs, Sheets, Slides ஆகியவையும் இருக்கும். அவற்றில் எதெல்லாம் தேவையில்லை என்பதை பார்த்து, நீக்கவும். Trash-ஐ காலி செய்யவும்.

Spam மெயில்கள்:

Gmail-இல் ஒரே ஐடி-யில் இருந்து வந்திருக்கும் தொடர்ச்சியான மெயில்கள் Spam-ஆக இருக்கும். இவற்றை மொத்தமாக செலக்ட் செய்து அழிக்கலாம். இதற்கு, “older_than:1y போன்ற Search Engine உதவும். 

பழைய பேக்அப்:

Google Drive-இல் Settings > Manage Apps ஆப்ஷனுக்கு சென்று தேவையற்ற App Backups அல்லது WhatsApp Backups-ஐ அழிக்கவும்.

புதிய கணக்கு:

புதிதாக ஒரு கூகுள் கணக்கை தொடங்கி, அதனை பயன்படுத்த தொடங்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.