புதுடெல்லி: ஆட்கடத்தல் வழக்கில் 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த பலரை மத்திய அரசு மீட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக பிஹார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி, பிஹார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.