ஆஸ்திரேலியா தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு!

India Women vs Australia Women: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் டிசம்பரில் ஆஸ்திரேலியா பெண்கள் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி விக்கெட் கீப்பர்-பேட்டர் யாஸ்திகா பாட்டியா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகி உள்ளார். இவரது இழப்பு இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மகளிர் பிக் பாஷ் லீக்கின் போது இந்திய வீரர் யாஸ்திகா பாட்டியாவிற்கு  மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. 

 News 
Squad Update: Uma Chetry replaces injured Yastika Bhatia#TeamIndia | Read More 

— BCCI Women (@BCCIWomen) November 27, 2024

இந்த காயம் சரியாக நீண்ட நாட்கள் ஆகும் என்று பிசிசிஐ மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. யாஸ்திகா பாட்டியா தற்போது பிசிசிஐ மருத்துவ குழுவால் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக உமா சேத்ரியை பிசிசிஐ தேர்வுக் குழு அணியில் எடுத்துள்ளனர். இதனை பிசிசிஐ X தளத்தில் பதிவிட்டுள்ளது. காயம் அடைந்த யாஸ்திகா பாட்டியாவுடன் ஒப்பிடும் போது உமா சேத்ரியின் அனுபவம் குறைவாக உள்ளது. இதுவரை அவர் நான்கு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 22 வயதான உமா சேத்ரி இந்த ஆண்டு தான் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை அவர் 4 டி20 போட்டிகளில் விளையாடி 9 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

யாஸ்திகா பாட்டியா இந்திய அணிக்காக 19 டி20 போட்டிகளில் விளையாடி 214 ரன்கள் அடித்துள்ளார். யாஸ்திகாவிற்கு பதில் இந்திய அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக ரிச்சா கோஷ் உள்ளார். எனவே உமா சேத்ரி அணியில் இடம் பெற்றாலும், விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவது கடினம் தான் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய மகளிர் அணி, டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 8ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறும் முதல் மற்றும் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட உள்ளனர். 3வது ஒருநாள் போட்டி டிசம்பர் 11ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த 3 ஒருநாள் போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 9:50 மணிக்கு தொடங்குகிறது. 

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹஸ்புனிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டிடாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாக்கூர், உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்).

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.