சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 2025 மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதற்கு முன்பு இருந்த சாதனைகளை பந்த் முறியடித்து நம்பர் 1 இடத்தில் உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார். ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி பந்தை 27 கோடிக்கு எடுத்தது. ரூ.20.75 கோடியில் பந்த் இருந்த போது டெல்லி கேபிட்டல்ஸ் ரைட் டு மேட்ச் பயன்படுத்தி பந்தை தக்கவைத்துக் கொள்ள முயன்றது. ஆனால் எல்எஸ்ஜியின் உரிமையாளர் உடனடியாக பந்தின் விலையை ரூ. 27 கோடி என மாற்றினார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் ரிஷப் பந்தை வேண்டாம் என்று முடிவு செய்தது. இதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத விதமாக லக்னோ அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
ரிஷப் பந்த் மறுபிரவேசம்!
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் சிக்கி கொண்ட ரிஷப் பந்த் அதன்படி கிரிக்கெட் விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனில் மீண்டும் விளையாடினார். அதன்படி டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்தார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வரும் ஐபிஎல் 2025 சீசனில் எல்எஸ்ஜி அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்க உள்ளார் பந்த். ஐபிஎல் 2025 போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு மார்ச் 14 ஆம் தேதி தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
24th Nov: Highest-paid player in IPL history
25th Nov: Wraps up a historical win in Perth
Rishabh Pant, ladies and gentlemen pic.twitter.com/NTas9iijdy
— Lucknow Super Giants (@LucknowIPL) November 25, 2024
பந்திற்கு எவ்வளவு சம்பளம்?
ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டாலும் முழு தொகையும் அவருக்கு சென்று சேராது என்று கூறப்படுகிறது. இந்திய அரசின் வருமான விதிகளின் படி பந்த் அவரது சம்பளத்தில் இருந்து 8.1 கோடி வரியை (30%) கட்ட வேண்டும். இதன் மூலம் பந்த் லக்னோ அணியில் இருந்து ஒரு சீசனுக்கு சம்பளமாக ரூ.18.9 கோடி பெறுவார்.
ஒரு ஐபிஎல் சீசனில் விளையாட பந்தின் சம்பளம்!
ஒப்பந்த மதிப்பு: ரூ. 27 கோடி
வரி விலக்கு: ரூ 8.1 கோடி
நிகர சம்பளம்: ரூ 18.9 கோடி
ரிஷப் பந்த் குறித்து ராபின் உத்தப்பா!
ரிஷப் பந்த் லக்னோ அணியில் எடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “அனைவரும் பந்த் பஞ்சாப் அணிக்கு செல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டம் வைத்துள்ளனர். அதிக தொகை வைத்து இருந்தும் பந்த் மீது அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ரிஷப் பந்த் மற்றும் பாண்டிங் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து இருக்கலாம். அதனால் தான் பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் மீது அதிக ஆர்வம் காட்டியது என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.