விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமே சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதன் பிறகு படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் உட்பட படத்தின் எந்த தகவலையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. படத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்து வருவதாகவே தகவல் கிடைத்தது. தற்போது படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருக்கின்றனர். கவினிடமும் இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதாக `ஸ்டார்’ திரைப்படத்தின் புரோமோஷன் சமயங்களில் கவின் கூறியிருந்தார்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். பிரவீன் கே.எல் இத்திரைப்படத்தை எடிட் செய்யவிருக்கிறார். துறு துறு சிறுவனாக ஜேசன் சஞ்சய் `வேட்டைக்காரன்’ திரைப்படத்தின் இன்ட்ரோ பாடலில் குட்டி நடனம் ஒன்றை போட்டிருப்பார். இவரும் நடிப்பு பக்கமே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டைரக்ஷன் பக்கம் களமிறங்கி பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.