ஆபாச வீடியோ வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் வீட்டில் அமலாக்கப்பிரிவு ரெய்டு; பின்னணி என்ன?

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கொரோனா காலத்தில் துணை நடிகைகளைப் பயன்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மொபைல் செயலியில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்காக ராஜ் குந்த்ரா கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹாட்ஷாட் என்ற மொபைல் செயலியில் இந்த வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தாக ராஜ் குந்த்ரா குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. ஆபாச வீடியோ மட்டுமல்லாது கிரிப்டோகரன்ஸ் ஊழல் தொடர்பாக ராஜ் குந்த்ரா மீதான புகார் குறித்தும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

ராஜ் குந்த்ரா

இந்த ஊழல் தொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் மும்பையில் குடியிருக்கும் வீட்டைக் காலி செய்யும்படியும், வீட்டைக் கையகப்படுத்தி இருப்பதாகவும் கூறி, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் ஷில்பா ஷெட்டியையும், அவரது கணவரையும் வீட்டிலிருந்து வெளியேற்றும் அமலாக்கப்பிரிவின் நடவடிக்கைக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. கிரிப்டோகரன்சி ஊழல் மூலம் ராஜ் குந்த்ரா சொத்துக்களை வாங்கியதாகக் கூறி 98 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 29) காலையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பையில் உள்ள ராஜ் குந்த்ரா வீட்டில் ரெய்டு நடத்தினர். ஆபாச வீடியோ தயாரிக்கப்பட்டதில் பணம் கைமாறியது தொடர்பான புகாரின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இந்த ரெய்டை நடத்தினர். ராஜ் குந்த்ரா மட்டுமல்லாது இதில் தொடர்புடைய வேறு நபர்களின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மும்பை மற்றும் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 15 இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.