சென்னை; புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், பாதிக்கப்டும் மக்கள் உணவருந்தும் வகையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவெடுத்து இருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை பொழுதில் அல்லது இரவு கரையைக் கடக்கும் என […]