Amazon Black Friday Sale: ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கு ஏற்ற நேரமாக இருக்கும். ஸ்மார்ட் டிவி -களில் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடியை அளித்துள்ளது. அமேசானில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பிளாக் ஃபிரைடே சேல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் டிவி மட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பதிவில் அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் ஸ்மார்ட் டிவி -களில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றி காணலாம். 32 இன்ச், 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவி மாடல்களில் கிடைக்கும் சிறந்த டீல்கள் மற்றும் சலுகைகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Acer 55 inch TV: ஏசர் 55 இன்ச் டிவி விலை
அமேசான் விற்பனையில், 55 இன்ச் திரை அளவு கொண்ட ஏசர் நிறுவனத்தின் இந்த டிவியை 55 சதவீத தள்ளுபடியுடன் ரூ.32,999 -க்கு வாங்கலாம். இந்த டிவியில் 36 வாட் ஒலி வெளியீடு மற்றும் 4K ரெசல்யூஷன் ஆதரவு உள்ளது.
TCL 32 inch TV: டிசிஎல் 32 இன்ச் டிவி விலை
இந்த 32 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 52 சதவீதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த டிவியை வெறும் ரூ.10,490 -க்கு வாங்க முடியும். இந்த டிவியில் டால்பி ஆடியோ, 24 வாட் ஒலி வெளியீடு மற்றும் HDR 10 ஆதரவு உள்ளது.
Toshiba 43 inch TV: தோஷிபா 43 இன்ச் டிவி விலை
43 இன்ச் கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 46 சதவீதம் என்ற பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு இந்த டிவியை வாடிக்கையாளர்கள் ரூ.24,499 -க்கு வாங்கலாம். இந்த டிவியில் ஸ்போர்ட்ஸ் மோட், HDR 10 ஆதரவு மற்றும் 4k ரெசல்யூஷன் ஆதரவு ஆகியவை இருக்கும்.
Xiaomi 43 inch TV: சியோமி 43 இன்ச் டிவி விலை
43 இன்ச் திரை அளவு கொண்ட இந்த Xiaomi Smart TV, அமேசான் பிளாக் ஃப்ரைடே சேலில் 42 சதவீத பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடிக்கு பிறகு, இந்த டிவி -யின் விலை ரூ.24,999 ஆக குறைந்துவிடும். இந்த டிவியில் 30 வாட் ஸ்பீக்கர், டால்பி விஷன், 4கே ரெசல்யூஷன், கூகுள் டிவி ஆதரவு ஆகியவை கிடைக்கும்.
கூடுதல் தள்ளுபடிகளை பெறுவது எப்படி?
Amazon Black Friday விற்பனைக்கு, ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda), எச்டிஎஃப்சி (HDFC) மற்றும் One கார்ஸ் மூலம் பணம் செலுத்தினால் 10 சதவீதம் வரை பம்பர் தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர, வாடிக்கையாளர்களின் வசதிக்காக வட்டியில்லா EMI வசதியும் இதில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவி -ஐ பரிமாற்றிக்கொளும் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிகையாளர்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும்.