கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்த கொற்றாண்டார் குளம் வீதி(மருதங்கேணி பளை சுனாமி அபாய வெளியேற்றபாதை) புணரமைக்கப்பட்டது.
இதன் மூலம் பெரும் சேதத்துக்கு உள்ளாகவிருந்த நிலையில் குறித்த பாதையின் இரு பக்கமும் மண் மூடைகள் அடுக்கப்பட்டு குறித்த வீதி சீரமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி திணைக்களம், பளை பிரதேச சபை மற்றும் பலாலி பாதுகாப்பு படை தரப்பினர் அடங்கிய குழுவினரின் ஒத்துழைப்புடன் குறித்த வீதி இவ்வாறு சீரமைக்கப்பட்டது.
அனர்த்த காலத்தில் இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த உள்ளூராட்சி திணைக்களம், பளை பிரதேச சபை மற்றும் பலாலி பாதுகாப்பு படை தரப்பினரினருக்கு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.