அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் மற்றும் தற்போதைய அவசர நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பதற்கான கள விஜயம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னாயக்க இன்று (30) மேற்கொண்டார்.
இதன் போது ஆளுநர், கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு விநியோகிக்குமாறு, அம்பாறை மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைத்தார்.
அத்துடன் மாவட்ட செயலகத்தின் ஊடாக அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.