ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை – காரைக்கால் இடையே மரக்காணம் அருகில் கரையைக் கடக்கத் தொடங்கியது புயல். 7 மணி நேரத்திற்குப் பிறகு இரவு 11.30 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது. இனி அப்புயல் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். இதனால் தமிழகத்தில் பரவலான மழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ள கோவை, நீலகிரி, திருப்பூர்,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப் பொழிவு இருக்கும்.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணிக்கே கரையைக் கடக்கத் தொடங்கி, மரக்காணம் அருகே கடந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் (3- 4 மணி நேரம்) புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்படுகிறது. நாளை மாலை வரை கடல் சீற்றமும், பலத்தக் காற்றும் வீசும்.
இதனால், விழுப்புரம், புதுவை, செங்கப்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 முதல் 70 கி.மீ வரையிலானப் பலத்தக் காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இப்போது மழைக் குறைந்திருக்கிறது. இரவு சென்னையில் விட்டு விட்டு அடை மழைப் பெய்யும்.
வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்
அடுத்து வரும் 24 மணிநேரத்திற்குக் கனமழை எச்சரிக்கை
ரெட் அலார்ட் (அதி கனமழை): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி. (ஓரிரு இடங்களில்)
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை): வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் (ஓரிரு இடங்களில்)
மஞ்சள் அலார்ட் (கனமழை): கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி (ஓரிரு இடங்களில்)
புயல் கரையைக் கடக்கத் தாமதம்
புயல் இன்று இரவு அல்லது நாளை காலை மகாபலிபுரத்திற்கும் ,கரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
புயல் எப்போது கரையை கடக்கும்?
சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புயல் கடலில் மையம் கொண்டிருக்கும் வரை மழைப்பொழிவு தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வட தமிழக பகுதிகளுடன் புதுவையிலும் தொடர்ந்து மழைப் பொழிகிறது. நாளை காலை புயல் கரையைக் கடக்கலாம் என பிரதீப் கூரியுள்ளார்.
புயல் கரையைக் கடக்கும் இடம் மாறியது
ஃபெஞ்சல் புயல் தற்போது சென்னை தென் கிழக்கே, 140 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது புயல் கரையைக் கடக்கும் இடம் மாறி இருக்கிறது என்றும், மரக்காணத்திற்கு அருகே ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்க இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
Live: Rain Alert :ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை புரசைவாக்கம் ஸ்பாட் விசிட
Rain Alert: ஃபெஞ்சல் புயல்… கனமழை காரணமாக எழும்பூர் கெங்குரெட்டி பாலம் மூடப்பட்டது
பழவந்தாங்கல் சுரங்கபாதை மூடல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது.இடம்; கிழக்கு கடற்கரை சாலை
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றமாக காணப்படுகிறது.
Live: Rain Alert :ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை சூளை ரோடு பகுதியில் மழை நீர்
அம்மா உணவகங்களில் இலவச உணவு
அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24மணி நேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்த நிலையில் அம்மா உணவகங்களில் இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருகிறது.
அண்ணா பல்கலைகழகத் தேர்வு ரத்து
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பு இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் நாளை(டிச.1) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புயல், மழை காரணமாக ரத்து செய்யப்படும் தேர்வு டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருக்கிறது.
சென்னை பீச் வேளச்சேரி ரயில் ரத்து
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருகிறது. அதேபோல ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் உடனே வாகனங்களை எடுக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் அறிவுறுத்தி இருக்கிறது.
மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கான உதவி எண் அறிவிப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இருக்கிறது. நேற்று பிற்பகல் புயலாக உருவான ஃபெஞ்சல் இன்று மாலை கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான புயலின் வேகம் அதிகரித்துள்ள சூழலில், சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இந்நிலையில் மழையின் போது மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கான உதவி எண்களை மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
காலை 11 மணி நிலவரப்படி மழையின் பாதிப்பால் மூடப்பட்டிருக்கும் சுரங்கப்பாதைகள் மற்றும் போக்குவரத்து மெதுவாக இருக்கும் சாலைகளின் பட்டியலை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி
‘முழு வீச்சில் நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’- மு.க.ஸ்டாலின்
இரண்டு, மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை பட்டாளம் பகுதி ஸ்பாட் விசிட்
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது
ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி
ஃபெஞ்சல் புயல்… தொடரும் கனமழை; சென்னை கோயம்பேடு பகுதி ஸ்பாட் விசிட்
18 விமானங்கள் ரத்து
புயல், கனமழை காரணமாக சென்னையில் 18 விமானங்கள் ரத்து. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவை ரத்து. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 12 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மழை மற்றும் புயல் பாதிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்
டெல்லி திரும்பும் திரௌபதி முர்மு.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துவிட்டு ஊட்டி ராஜ்பவனில் இருந்து டெல்லி திரும்புகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சென்னையில் இன்று நகைக்கடைகள் மூடல்
புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று (நவ.30) நகைக் கடைகள் மூடல் – சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு.
திரையரங்குகள் செயல்படாது!
புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் உள்ள சுரங்கப்பாதைகளின் காலை 09.24 மணி நிலவரம் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.
வட தமிழக கடலோரங்களில் மழை தொடரும்
வட தமிழக கடலோரங்களில் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நீடிக்கும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் – வானிலை மையம்
மீண்டும் பார்க்கிங் பகுதியான வேளச்சேரி பாலம்
சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்
உத்தரவை மீறினால் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி
நெருங்கும் புயல்!
ஃபெஞ்சல் புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 180 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 7 மணி அளவில் மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே கரையை கடக்க இருக்கிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத் தேர்வுகள் ரத்து
புயல் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து. இன்று நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 3-ம் தேதி நடைபெறும் என்று மத்திய பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
அதிகபட்சமாக கத்திவாக்கத்தில்
கத்திவாக்கத்தில் 7 செ.மீ., திருவொற்றியூர் -5 செ.மீ, தண்டையார்பேட்டை – 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ என மழைப்பதிவாகி இருக்கிறது
தயார் நிலையில் இருக்கும் மீட்புக்குழுவினர்
தமிழ்நாடு & புதுச்சேரியில் 30 பேர் கொண்ட 11 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் வழக்கம்போல் இயங்கும் புறநகர் மின்சார ரயில்கள்
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சாவூர், சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3 மணி நேரம் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று கரையைக் கடக்கும் ஃபெஞ்சல் புயல்; சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை!
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், இன்று (30-11-2024) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.
சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்ட்ரல், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அம்பத்தூர் ஆவடி என சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை மையம்
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது புயலாக வலுப்பெற்றிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இந்தப் புயலுக்கு `ஃபெங்கல்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், நாளை (நவம்பர் 30) 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
இதுகுறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன், “ஃபெங்கல் புயல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரியில் நாளை 30ஆம் தேதி பிற்பகல் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.
இதன் காரணமாக அடுத்துவரும் மூன்று தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களில் புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை 30-ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், தஞ்சாவூர், டெல்டா மாவங்களில் ஒரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருக்கிறது.
தரைக்காற்று எச்சரிக்கை பொறுத்தவரையில், இன்று முதல் நாளை வரை வட தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 – 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீச கூடும்.
நாளை புயல் கரையைக் கடக்கின்ற பொழுது சூறாவளி காற்று மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 351 மி.மீ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.