“இந்த 5 அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வாழ்வில் முன்னேறுகிறீர்கள்…'' | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்.

சுய முன்னேற்றம் என்பது நம் வாழ்வில் நாம் நிர்ணயித்த இலக்குகளை அடைவது மட்டுமல்ல, ஒரு சிறந்த மனிதனாக நாம் மாறுவதும் தான். 

ஒரு ஐந்து அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் வாழ்வில் முன்னேறுகிறீர்கள் என்கிறது உளவியல், அது என்னென்ன? காண்போம் வாருங்கள்.

1. சுய விழிப்புணர்வு:

தனக்கு என்ன வேண்டும் என்பதே இங்கு பலருக்கு தெரிவதில்லை, ஆனால் அவர்கள் மற்றவர்களை எடை போடுவது தான் இங்கு வேடிக்கை. தனிப்பட்ட முறையில் நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று இந்த சுய விழிப்புணர்வு. உங்களை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

சித்தரிப்புப் படம்

உங்கள் பலம் என்ன, உங்கள் பலவீனம் என்ன, உங்கள் மதிப்புகள் (VALUES) என்ன? என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களை பற்றி நீங்கள் நன்றாக புரிந்து வைத்துக்கொள்வதால் என்ன நன்மை கிடைக்க போகிறது என்று யோசிக்கிறீர்களா?

உங்கள் வாழ்வில் பல தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்க இது நிச்சயம் உதவும். நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

2. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல்:

உங்கள் உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பதிலும், வெளிப்படுத்துவதிலும் நீங்கள் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். எடுத்தோம் கவுத்தோம் என மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவதற்கு பதிலாக, கொஞ்சம் நிறுத்தி, நிதானமாக  முதிர்ச்சியுடன் செயலாற்ற நம்மை நாம் பழகிக்கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் செயல்படுவது உறவுகளை வலுவடைய செய்து அது உடைந்து போகாமல் பாதுகாக்கிறது. 

சித்தரிப்புப் படம்

3. மற்றவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்:

வாழ்வில் தனிப்பட்ட முறையில் வளர்ந்து வரும் நபர்கள் தங்களை பற்றி நன்றாக புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் மற்றவரின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க கூடிய நபர்களாக இருக்கிறார்கள். 

இது நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் அவர்கள் பழகும் அனைவரிடத்திலும் உறவை  மேம்படுத்த உதவுகிறது. அவன் இப்படித்தான், இவன் இப்படிதானு, மற்றவர்களை பற்றி புறம் பேசாமல், பாவம் அவன் வாழ்க்கையில என்ன பிரச்னையோ.., என்று மற்றவர்களின் இடத்திலிருந்து யோசிப்பவர்கள் வாழ்வில் முதிர்ச்சி அடைந்த மனிதர்களாகவும் மாறுகிறார்கள்.

4. மற்றவரின் கருத்துக்களால் பாதிக்கப்படுவதில்லை:

பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் விரும்பும் செயல்களை (நல்ல செயல்களை) முயற்சி செய்து பார்க்க கூட தயங்குகின்றனர்.

நம் முயற்சியை யாராவது கிண்டல் செய்தால் என்ன செய்வது? தோற்று விட்டால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்? இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்று கேட்டுவிட்டால்? இது போன்ற பல கேள்விகள் நம்முள் எழுவது நாம் நம்மை விட மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதை தான் காட்டுகிறது.

அதுவே, தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் முன்னேறும் நபர்கள் மற்றவர்களின் விமர்சனங்களால், கருத்துக்களால் பாதிக்கப்படுவதில்லை. இவர்கள் அதிக தன்னம்பிக்கை உடைய மனிதர்களாக வளர்கிறார்கள். 

சித்தரிப்புப் படம்

5. தீர்வு சார்ந்த சிந்தனை:

ஒரு சிறு பிரச்சனை வந்தாலே தன் வாழ்க்கையே முடிந்து விட்டது போல் என்னும் மனிதர்கள் மத்தியில், வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை கண்டு வருந்தாமல், சரி இப்படி ஒரு பிரச்சனை வந்து இருக்கிறது இதை  எவ்வாறு சரி செய்வது? இனி இந்த பிரச்னை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று  யோசிப்பவர்கள்  வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வளர்ச்சி மனப்பான்மை நம்  தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெற உதவுகிறது.

இந்த ஐந்து அறிகுறிகளும் உங்களிடம் இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த பழக்கங்கள் உங்களிடம் இல்லாவிட்டால் அவற்றை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணுங்கள்.

எந்த முன்னேற்றமும் இல்லாத வாழ்வை பல ஆண்டுகள் வாழ்வது வாழ்க்கை அல்ல.. முன்னேறுவோம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.