ப்தேதிகளிசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தன்னை ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எடுக்காதது குறித்து தீபக் சஹார் மனம் திறந்திருக்கிறார்.
கடந்த நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் நடைபெற்றது. இதில், இரண்டாவது நாள் ஏலத்தில்தான் தீபக் சஹாரின் பெயர் வந்தது. அப்போது சென்னையிடம் ரூ. 13 கோடி மட்டும்தான் இருந்தது.
இறுதியில், தீபக் சஹாரை ரூ. 9.25 கோடிக்கு மும்பை அணி ஏலம் கேட்க, சென்னையால் அவரை எடுக்க முடியாமல் போனது. 2018, 2021, 2023 ஆகிய சீசன்களில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதில் பவர்பிளே ஸ்பெசலிஸ்ட் பவுலராக ஜொலித்த தீபக் சஹாரை சென்னை அணி வேறு வழியில்லாமல் கைவிட்டது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
அப்போதும் கூட அவரின் மனைவி ஜெயா, தன்னுடைய இதயம் எப்போதும் சென்னை அணியுடன்தான் என நெகிழ்ந்தார். இந்த நிலையில், சென்னை அணி தன்னை ஏலம் எடுக்காதது குறித்து ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசியிருக்கும் தீபக் சஹார், “மஹி (தோனி) பாய் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஆதரவாக இருக்கிறார். அதனால்தான், நான் சென்னை அணிக்குச் செல்ல விரும்பினேன். ஆனால், ஏலத்தில் இரண்டாவது நாளில்தான் என்னுடைய பெயர் வந்தது.
அதனால், நான் சென்னை அணிக்குத் திரும்புவது கடினம் என்று எனக்குத் தோன்றியது. அவர்களிடம் ரூ. 13 கோடிதான் இருந்தது. அப்படியிருந்தும் ரூ. 9 கோடி வரை ஏலம் கேட்டனர். இது எப்படியும் கடினமாக இருக்கும் என்று மனதைத் தயார் செய்துவிட்டேன்.” என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…