இது பங்குச்சந்தை பற்றியது மட்டுமல்ல… அதையும் தாண்டியது. பொதுவாகவே, பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் என எது எடுத்துகொண்டாலும் நாமினி கேட்பது வழக்கம்…. நாமும் ஒரு நாமினியின் பெயரைக் கொடுத்துவிடுவோம். இதுவரை சரி தான். ஆனால், இதற்கடுத்தும், நாமினிக்கு நாம் முதலீடு செய்திருப்பது… அதுவும் அவர்களது பெயரில் முதலீடு செய்திருப்பது தெரிவது மிக மிக அவசியம்.
இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமல்ல, இந்த ரூல் அனைத்து முதலீடுகளுக்குமே பொருந்தும். நமக்குப் பிறகு நமது பணம், முதலீடுகள் அவர்களுக்கு தான் சென்று சேரும் என்றாலும், அவற்றை க்ளெய்ம் செய்ய நாமினிக்கு முதலீட்டைப் பற்றித் தெரிந்திருந்தால் மட்டுமே முடியும்.
வெறும் முதலீடு செய்வது, நாமினியை சேர்ப்பது என்பது மட்டுமல்லாமல் நம் முதலீடுகளை பற்றி நாமினிகளுக்கு சொல்வது, என்னென்ன முதலீடுகள் இருக்கிறது… எதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது… எங்கே க்ளெய்ம் செய்ய வேண்டும் என்பதை ஆன்லைனிலேயோ, ஆப்லைனிலேயோ தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்திருப்பது சிறந்தது. இந்தப் பதிவை பற்றி நாமினிக்கு முன்னரே சொல்லி விடுவது முக்கியம். இந்த பதிவு எதாவது ஒருவேளையில் நமக்கே உபயோகமாகக் கூட இருக்கலாம். அதனால், இதை கட்டாயம் பின்பற்றுங்கள் மக்களே.