2023 பேட்சில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஹர்ஷ் பர்தன், பதவியேற்க செல்லும் போது கார் விபத்தில் பலியானார். 26 வயதான ஹர்ஷ் பர்தன் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி பெற்றுவந்துள்ளார். மைசூரில் உள்ள கர்நாடக போலீஸ் அகாடமியில் பயிற்சி முடிந்ததை அடுத்து ஹாசன் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஹர்ஷ் பர்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று காரில் ஹாசன் சென்றார். ஹோலேநரசிபூரில் பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்க […]