சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைத் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தமாக 25 தமிழ் மொழி படங்கள் தமிழ்த் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படவிருக்கின்றன.
தமிழ்த் திரைப்படங்கள் பிரிவில் அமரன், போட், ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வேட்டையன், டிமான்டி காலனி -2, கருடன், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா போன்ற திரைப்படங்கள் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளன.
மேலும், செவப்பி, புஜ்ஜி அட் அனுப்பட்டி, வெப்பம் குளிர் மழை, அயலி, ஹாட்ஸ்பாட் போன்ற படைப்புகளும் திரையிடத் தேர்வாகியுள்ளன.
இதைத் தாண்டி உலக சினிமா போட்டி பிரிவில் `கிணறு’ என்கிற ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் மட்டும் திரையிடத் தேர்வாகியிருக்கிறது. இதனைத் தாண்டி ‘ஹாய் நானா’ திரைப்படமும் இப்பிரிவில் திரையிடப்படவுள்ளது. இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படவிருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் `ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் மட்டும்தான். இப்படத்தைத் தாண்டி லெவல் க்ராஸ், ஆடுஜீவிதம், கிஷ்கிந்த காண்டம் போன்ற மலையாளப் படங்கள் திரையிடப்படவுள்ளன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…