திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் கூண்டோடு பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது. திருவண்ணாமலையில் மகாதீபம் திருவிழா தொடங்கி உள்ள நிலையில், அண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு குடும்பமே உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களை புரட்டிப்போட்ட ஃபெஞ்சல் புயல், திருவண்ணாலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சூறையாடிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை […]