டெல்லியில் சிறிது முன்னேற்றம் அடைந்த காற்றின் தரம்

புதுடெல்லி,

டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில மாதங்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் இருந்து வந்த நிலையில், இன்று சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) 274 ஆக பாதிவானது. கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் சுவாச பிரச்சினை குறைந்துள்ளது.

நகரின் 37 கண்காணிப்பு நிலையங்களில், பவானா, ஜஹாங்கிர்புரி, முண்ட்கா, ரோகினி, ஆர் கே புரம், ஷாதிபூர், சிரி கோட்டை உள்பட எட்டு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலும், மீதமுள்ள நிலையங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவில் பாதிவாகியுள்ளன.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது, இது பருவத்தின் சராசரியை விட ஒரு உச்சநிலை அதிகமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம். 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 450 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது. 450 மேல் இருந்தால் கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.