பிவி சிந்துக்கு டும் டும் டும்… திருமண தேதி எப்போது? மாப்பிள்ளை யார் தெரியுமா?

Badminton Player PV Sindhu Marriage: இந்தியாவை சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து. மகளிர் பேட்மிண்டனில் உலக சாம்பியனான இவர் இந்தியாவுக்கு முதல்முறையாக அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற கொடுத்தவர் ஆவார். அதாவது ஆடவர் மற்றும் மகளிர் பேட்மிண்டனில் இந்தியாவில் யாருமே தொடர்ந்து இரண்டு முறை கோப்பைகளை வென்றதில்லை, பிவி சிந்துவை தவிர…

உச்சத்தில் இருந்த பிவி சிந்து தற்போது வாழ்விலும் சரி, விளையாட்டிலும் சரி சில ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் சையத் மோடி சர்வதேச தொடரை வென்றதன் மூலம், உலக பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டிருந்தார். இதுமட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு நற்செய்தி தற்போது வந்துள்ளது.

பிவி சிந்துவுக்கு திருமணம்

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான பிவி சிந்து (PV Sindhu) இம்மாத இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். தனியார் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபரை பிவி சிந்து கரம் பிடிக்க உள்ளார். அந்த வகையில், பிவி சிந்துவின் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்குகள் எந்தெந்த தேதியில் நடைபெறுகிறது, பிவி சிந்து கரம்பிடிக்க இருக்கும் மணமகன் யார் (PV Sindhu Fiance) என்பது குறித்தும் இதில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பிவி சிந்துவின் திருமணம் (PV Sindhu Marriage) குறித்து அவரது தந்தை பிவி ரமணா ஊடகத்திடம் கூறுகையில்,”எங்களின் இரு குடும்பங்களும் நீண்ட கால பழக்கம் கொண்டவை. ஆனால், திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கின. பிவி சிந்து வரும் ஜனவரிக்கு பின்னர் பேட்மிண்டனில் பிஸியாகிவிடுவார்.

பிவி சிந்து திருமணம் எப்போது?

டிசம்பரில் அவருக்கு தொடர்கள் ஏதும் இல்லை. எனவே, இந்த மாதத்திலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டோம். இரு வீட்டாரும் இணைந்து வரும் டிசம்பர் 22ஆம் தேதி திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பின்னர் பிவி சிந்து விரைவாகவே தனது பயிற்சிகளை தொடங்கி, அடுத்த முக்கியமான சீசனுக்கு தயாராவார்” என தகவல் தெரிவித்தார். 

திருமணம் டிச. 22ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் நகரில் (Udaipur) நடைபெறும் என்றாலும், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் நிகழ்வுகள் டிச. 20ஆம் தேதி அன்று தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு பின்னர் டிச. 24ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலும் திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் ஆகியோரே பங்கேற்பார்கள் என்றும், வரவேற்பு நிகழ்ச்சியில்தான் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

பிவி சிந்துவின் வருங்கால கணவர் யார்?

Posidex Technologies நிறுவனத்தின் செயல் இயக்குநராக உள்ள வெங்கட தத்தா சாய் (Venkata Datta Sai) என்பவரையே பிவி சிந்து கரம் பிடிக்க உள்ளார். இவர் Posidex Technologies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜி.டி. வெங்கடேஷ்வர் ராவ்வின் மகன் ஆவார். ஜி.டி. வெங்கடேஷ்வர் ராவ் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பி.வி. சந்தித்து திருமணம் செய்துகொள்ள இருக்கும் வெங்கட தத்தா சாய் மகாராஷ்டிராவில் உள்ள Flame பல்கலைக்கழக்கத்தில் பிபிஏ இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் மர்றும் மிஷின் லேர்னிங் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் JSW மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.