தென் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்ததை தொடர்ந்து திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் ஏரிகளில் நீர் நிரம்பியதால் வயல் வாய்க்கால்கள் எங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பியதால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது ஏற்கனவே வீடூர் அணை திறக்கப்பட்ட நிலையில் சாத்தனூர் அணையும் திறக்கப்பட்டதால் தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல […]