Pushpa 2: “எங்களுக்கு பெருமை சேர்த்த முதல் தெலுங்கு பெண்…" ஶ்ரீ லீலாவை புகழ்ந்த அல்லு அர்ஜுன்

இதையொட்டி இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இறங்கியுள்ளனர் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர். இதனிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா – 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்க்கா..’ பாடல் வரிகளை உள்ளடக்கிய விடியோ வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் என மூன்று மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. ‘கிஸ்க்கா..’ பாடல் விடியோவில் தனது க்யூட்டான நடனத்தாலும், க்யூட் ரியாக்‌ஷனாலும் ஶ்ரீ லீலா ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறார். முழுக்க ழுழுக்க ‘ஊ சொல்றியா மாமா..’ பாடலைப் போன்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பாடலில், சமந்தாவைப் போலவே, ஶ்ரீ லீலாவும் ரசிகர்களால் கவனம் பெற்றிருக்கிறார்.

ஶ்ரீ லீலா

இந்த நிலையில், புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு விழா மேடையில், “ மிக அழகான பெண். சிறப்பான நடனம், நடிப்பு. நிச்சயமாக ஶ்ரீ லீலாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. ஸ்ரீலீலா, உனக்கு என் நல்வாழ்த்துகள். இந்த தலைமுறைக்கும், அனைத்து தெலுங்கு பெண்களுக்கும் ஒரு உத்வேகமாகவே உங்களைப் பார்க்கிறேன். இந்த தலைமுறையில், எங்களுக்கு பெருமை சேர்த்த முதல் தெலுங்கு பெண் ஸ்டார் நீங்கள். இனி நீங்கள்தான் இந்தத் துறையையும், அனைவரையும் இன்னும் உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.