உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பம்

அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்றிலிருந்து (04) டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு இணங்க பரீட்சைகள் நடைபெறும்.

பரீட்சைகள் இடம்பெறாத தினங்களுக்காக டிசம்பர் 21ஆம் திகதி மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார்.

சகல பரீட்சை விண்ணப்பதாரிகளுக்குமான திருத்தப்பட்ட, அச்சிடப்பட்ட புதிய நேர அட்டவணை டிசம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை கிடைக்கச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே சகல விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட நேர அட்டவணையை பரீட்சை இலக்கத்துடன் http://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.