தமிழ்நாட்டில் இன்னும் மழை மோடு போகவில்லை. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே தான் இருக்கிறது. அப்படி இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் படி, இன்று காலை 10 மணி வரை…
கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
நேற்று வெளியான வானிலை மைய கணிப்பு படி, சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் ஞாயிறு வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதன் பின்னர், அடுத்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை மேகமூட்டமாக காணப்படுவதுடன் லேசான மழை பெய்யலாம்.
மதுரையில் இன்று மேகமூட்டம் மற்றும் இடியுடன் கூடிய லேசான மழை இருக்கலாம். நாளையும், அதற்கு அடுத்த நாளும் மேகமூட்டம் பிளஸ் லேசான மழை இருக்கலாம். ஞாயிற்றுகிழமை மேகமூட்டமாக இருக்கும். அதன் பின்னர், வரும் திங்கள்கிழமை மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்யலாம். அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.